நாட்டின் சகல மக்களையும் உள்ளடக்கியதான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையுடனான பயணத்தின் மீது நாம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான நுட்பங்கள் மற்றும் மனித வளங்களைத் தயார்படுத்தி வருகின்றோம். ஆனாலும், இந்தப் பயணத்திற்கு சர்வதேச சமூகத்தினரின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆலோசனை என்பன அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்தது. அந்த அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கம் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகிறது. இதற்கான எமது அணுகுமுறை பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்புக்கள், புரிந்துணர்வு மற்றும் கற்றல் மூலமாக அமையுமேதவிர முரண்பாடாக அமையாது.
இதன் அடிப்படையில், அரசாங்கம் தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன், ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோவுக்கு இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்துள்ளோம். மனித உரிமை சமவாயத்தில் இலங்கை பங்குதாரர் என்ற ரீதியில் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்புடன் செயற்படும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று 48 நாட்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் கடந்த அரசாங்கத்தின் இனவாதமான மனப்பான்மை உள்ளிட்ட விடயங்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன.
இந்த சவால்களை எதிர்கொண்டு வரலாற்று ரீதியான பயணத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு இந்த சபை, ஆணையாளர், பங்குதாரர்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இலங்கை டயஸ்போராக்கள் (புலம்பெயர் ஈழத்தமிழர்களும், அவர்கள் சார் அமைப்புக்களும்) எம்மீது நம்பிக்கைவைத்து எமது செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்டிருந்த இணையத்தளங்களின் தடைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன, நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
வெளிநாட்டில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடக செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை அச்சமின்றி மேற்கொள்வதற் கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் பயணத்தில் இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது: ஐ.நா.வில் மங்கள சமரவீர உரை!