தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் அதிகார சபை (ஓளடத கொள்கைகள்) சட்ட மூலம் 67 மேலதிக வாக்குகளால் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 68 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான அஜித்குமார மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தார்.
நீண்டகாலமாக இழுபட்டு வந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைச் சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் கலாநிதி ராஜிதன சேனாரத்னவால் முன்வைக்கப்பட்டது.
கட்டுபடியான விலைகளில் மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான தரமான மருந்து வகைகளையும், மருத்துவ உபகரணங்களையும் கிடைக்கக் கூடியதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலம் அமைந்துள்ளது.
மருத்துவப் பொருட்களின் இறக்குமதி, விநியோகம், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், விளம்பரப்படுத்தல் போன்ற விடயங்கள் இச்சட்டமூலம் ஊடாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் நல்ல தரத்திலான மருத்துக்களை உற்பத்தி செய்வதை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தலை ஊக்குவித்தல், ஒழுங்குபடுத்தல், சந்தையில் மருந்துகளை விநியோகித்த பின்னர் கண்காணித்தல், மருந்துகள் தொடர்பாக பரீட்சிப்புக்களை நடத்துதல் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் இந்த சட்டமூலத் தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

0 Responses to தேசிய ஓளடத கொள்கைகள் சட்டமூலம் நிறைவேற்றம்!