Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் முதன் முறையாக மகளுக்காக தாயே வாடகைத் தாயாக மாறி குழந்தை பெற்றுக் கொடுத்துள்ள நிகழ்வு தமிழகத்தில் நடந்துள்ளது.

சென்னை அருகே தி.நகரில் வசித்து வரும் 27 வயதான பெண் ஒருவருக்கு கர்ப்பபை பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பபையை நீக்கிவிட்டனர். இனிமேல் அப்பெண் குழந்தை பெற வாய்ப்பு இல்லை. வாடகத் தாயார் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்த அக்குடும்பத்தினர் பல இடங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை தேடினர். ஆனால் ரூ 8 லட்சம் செலவானானதைத் தவிர வேறெந்த பலனும் இல்லை.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஜெயராஜ் மற்றும் ஜெயராணியை அணுகினர். அவர்கள் இப்பெண்ணின் உறவுக் கார பெண்கள் யாராவது வாடகைத் தாயாக வந்தால் மிகவும் நல்லது. லட்சக்கணக்கில் பணம் செலவாதையும் தவிர்க்கலாம் என ஆலோசனை கூறினர். அதையடுத்து, அப்பெண்ணின் தாயாரே மகளுக்காக வாடகைத் தாயாக மாற முன்வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது மாதவிடாய் நின்றிருந்த போயிருந்த போதும், அவரது கர்ப்பப்பை நன்றாக இருப்பது தெரியவந்தது.

டாக்டர்கள் மருந்து மூலம் மாதவிடாயை வரவழைத்து, கர்ப்பப்பை கருவை சுமப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மருமகனின் விந்தணுவும், மகளின் கருமுட்டையும் சேர்த்து கருவாக்கம் செய்து தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. எதிர்பார்த்தபடியே கரு நல்ல நிலையில் வளர்ந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமியின் தாய் கடந்த நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்று சீதாலட்சுமிக்கு கொடுத்தார்.

இது குறித்து டாகடர் காமராஜ் ஜெயராணி கூறியதாவது:

இந்தியாவில் மகளுக்காக தாயே வாடகை தாயாக மாறி இருந்து குழந்தை பெற்றுகொடுத்திருப்பது இதுவே முதல்முறையாகும் என்று தெரிவித்தனர். குழந்தை 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 Responses to மகளுக்காக தாயே வாடகைத் தாயாக மாறி குழந்தைப் பெற்றுக் கொடுத்த நிகழ்வு தமிழகத்தில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com