Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்புத் திகதியை நாளை அறிவிக்க உள்ளார் நீதிபதி.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு என்பது உண்மைதான் என்று கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, அபராதத் தொகை மற்றும் சிறைத் தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரித்து வந்தார்.

கடந்த 40 நாட்களாக பல்வேறுக் கட்ட வாதங்களையும் கேட்டு வந்த நீதிபதி குமாரசாமி, இவ்வழக்கின் தீர்ப்புத் திகதியை நாளை அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வருகிற 18ம் திகதி திமுகவை சேர்ந்த அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழகறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது என்று தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது. மேலும், இவ்வழக்குக் குறித்த தமது கருத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே நீதிபதி குமாரசாமி அவகாசம் கொடுத்துள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெ உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு முறையீட்டு வழக்கின் தீர்ப்பு திகதி நாளை: நீதிபதி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com