Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பிரஷாந்த் பூஷன்,யோகேந்திரநாத் ஆகிய இருவரும் கட்சிக்கு எதிராக வேலை செய்ததாக விலக்கி வைக்கப்பட்டனர்.

டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றபோது பிரஷாந்த் பூஷன், யோகேந்திரநாத் இருவரும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் ஜெயிக்கக் கூடாது என்று பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில் இவர்கள் இருவரும் கட்சியைத் தங்கள் வசம் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதை எல்லாம் பற்றிக் கவலைக்கொள்ளாத கெஜ்ரிவால் தமது உடல் நிலையைக் கவனிக்க, பெங்களூரு சென்று அங்கு இயற்கை வைத்திய முறை சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கட்சிக்குள் பூதாகரமாகப் பிரச்சனைகள் கிளம்ப, இருவரையும் ஆம் ஆத்மி தற்போது விலக்கி வைத்துள்ளது. இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரஷாந்த் பூஷன், நாங்கள் ஒன்று நினைத்து செய்த காரியம் மற்றவர்களால் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. உண்மையை நிரூபிக்கும் வரை போராடுவேன் என்று கூறியுள்ளார்.

0 Responses to ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரஷாந்த் பூஷன்,யோகேந்திரநாத் விலக்கி வைப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com