Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சரவை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) பதவியேற்றது.

புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சி.தண்டாயுதபாணி கல்வி, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துரைராஜசிங்கம் விவசாயம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கலாவதி ஆரியவதி காணி, வீதி அபிவிருத்தி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.ஐ.எம்.மன்சூர் சுகாதாரம் மற்றும் சுதேச கூட்டுறவுத்துறை அமைச்சராவும், முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதுவரை ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மைப் பலத்தினை இழந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு ஆட்சியமைத்தது. ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்கள் தமது ஆதரவினை நேற்று திங்கட்கிழமை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்போடும், எஞ்சிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவோடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சரவை பதவியேற்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com