தேர்தலுக்காக கெஜ்ரிவால் எதையும் சகித்துக்கொள்ளக் கூடியவர் என்று ஆம் ஆத்மியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளது தம்மை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தேர்தலுக்காக கெஜ்ரிவால் எதையும் சகித்துக் கொள்பவர் என்று நேற்று பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளார், இதற்கு கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைபாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், தாம் டெல்லி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி அமைப்பதில் மட்டுமே குறியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், இயற்கை சிகிச்சைப் பெற அவர் இன்று பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ள நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மியின் செயற்குழுக் கூட்டம் நடைப்பெற உள்ளது.
ஆம் ஆத்மியில் அதிகாரப்போட்டி நிலவி வரும் இந்த வேளையில் இந்தக் கூட்டத்தில் பிரஷாந்த் பூஷன், யோகேந்திரன் உள்ளிட்டவர்கள் கெஜ்ரிவாலுக்கு கட்சியில் எந்தவித அதிகாரமும் வழங்கப் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to தேர்தலுக்காக கெஜ்ரிவால் எதையும் சகித்துக்கொள்ளக் கூடியவர்: பிரஷாந்த் பூஷன்