உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை நானே சரியான முறையில் பின்பற்றுகிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹொரண, மதுராவெல பிரதேச சபை வளாகத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியை நோக்கி அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் தமது கேள்விகளை முன்வைத்தனர். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட தரப்பினரால் நடத்தப்படவுள்ள கூட்டத்துக்குச் செல்வீர்களா? என்று ஊடகவியலாளர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், 'கண்டி கூட்டத்துக்கான அழைப்பு எனக்கு கிடைத்துள்ளது' என்றுள்ளார். இருப்பினும், அக்கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் அவர் உறுதியாக எதுவும் கூறவில்லை. ஆனாலும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது.’ என்றுள்ளார்.

0 Responses to உண்மையான சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது: மஹிந்த