காணாமற்போனவர்களை மீட்டுத்தரக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
காணாமற்போனோரை மீட்கப் போராடும் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டங்களுக்கு பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வியாழக்கிழமை மாலை 05.00 மணிக்கு முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபவனி இன்று கிளிநொச்சியை வந்தடைந்து, தொடர்ந்து நல்லூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்கு சென்று சேரவுள்ளது.

0 Responses to யாழிலும், கிளியிலும் காணாமற்போனவர்களை மீட்டுத்தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!