Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் வடக்கு- கிழக்கில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவினர்கள் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அதன் பின்னர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் முன்வைத்தனர். அப்போது, காணாமற்போனவர்களின் உறவினர்களிடம் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமற்போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு சில இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக நாம் அரசாங்கத்துக்கும், தனிப்பட்ட வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். அவ்வாறான முகாம்கள் இருக்கின்றனர் என உங்களுக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் எங்களிடம் கேட்டபோது நாம் அதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

இரகசிய முகாம்களில் உள்ளவர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அதன் பின்னர் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எனவே ஆக்க பொறுத்த நாம் ஆறபொறுக்கவேண்டும். ஏனெனில் இரகசிய முகாம்கள் என்பதனால் அவை தொடர்பில், நாம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாமலிருக்கின்றது.

சிறைகளிலும் மற்றும் நலன்புரி முகாம்களிலும் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெசாக் தினமான எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டிருக்கின்றோம். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போனவர்களில் பலர் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com