Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் பாரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. அப்படி பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அதனைத் தீர்க்கும் வழிகள் எமக்குத் தெரியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் பாரிய பிரச்சினைகளும், முறுகல்களும் இருப்பதாக ஊடகங்களோ தொடர்ந்தும் செய்தி வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கும் – முதலமைச்சருக்கும் இடையில் பனிப்போர் இடம்பெற்று வருவது வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளைப் பாதிக்குமா? தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நீங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகிறீர்கள் என்று தேசிய ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனை ஊடகங்களில் பிரசாரப்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது எமது கட்சியுடன் சம்பந்தப்பட்ட விடயம். அரசியல் ரீதியாக கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமானதொரு விடயம். அதனைப் பகை என்று கூற முடியாது. பிரதமர் மற்றும் முதலமைச்சரிடையேயும் அத்தகையதொரு நிலை ஏற்பட்டதே தவிர அவர்களிடையே வேறெந்த விதமான தனிப்பட்ட பகைமையும் கிடையாது.

எனவே, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இதனை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும். இதையெல்லாம் பகிரங்கமாகக் கூற முடியாது. இதற்கு விளம்பரமும் தேவையில்லை. இவ்விடயத்தை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.” என்றுள்ளார்.

0 Responses to ரணில் - விக்கியிடையே பாரிய முறுகல்கள் ஏதும் இல்லை: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com