Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைப்பதாகவும், அந்த நிதியை ஊழலற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த ரவி கருணாநாயக்க, வீதி ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றால் அதற்கு 100 இலட்சம் செலவிடுவது அபிவிருத்தியல்ல எனவும் ஊழலைக் குறைப்பதல்ல, அதனை முழுமையாக இல்லாதொழித்து புதிய நாடொன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைக்கின்றது: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com