கியூபப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவரும் முன்னால் அதிபருமான 88 வயதாகும் ஃபிடெல் காஸ்ட்ரோ ஒரு வருட கால மறைவின் பின்னர் கடந்த திங்கட்கிழமை வெனிசுலா பொது மக்கள் முன் முழு உடல் நலத்துடன் தோன்றியுள்ளார்.
இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெனிசுலாவின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் காஸ்ட்ரோவின் மிக நீண்ட கால எதிரியான அமெரிக்கா கடந்த டிசம்பரில் கியூபாவுடனான உறவைப் புதுப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கியூபாவுக்கு வெளியே கடந்த ஒரு வருடத்தில் அதாவது வெளிநாடான வெனிசுலாவில் காஸ்ட்ரோ மக்கள் முன் தோன்றியிருப்பது இதுவே முதன் முறையாகும். எனினும் திங்கட்கிழமையே காஸ்ட்ரோவின் இந்த பிரசன்னம் இடம்பெற்ற போதும் அது வெளியுலக ஊடகங்களுக்கு 5 நாட்கள் கடந்த பின்னர் தான் தெரிய வந்தது ஏன் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஸ்ட்ரோ வெனிசுலாவில் பங்கு பற்றிய வைபத்தின் போது 33 வெனிசுலா மாணவர்கள் அடங்கிய பாடசாலையை சந்தித்ததுடன் இம்மாணவர்கள் கியூபாவுக்கான ஒற்றுமை செயற்திட்டத்தினை 1 1/12 மணித்தியாலங்கள் ஈடுபட்டுக் காட்டினார்கள் என்றும் கூறப்படுகின்றது.
சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததில் இருந்து எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலா, கம்யூனிச கியூபாவுடன் தொடர்புகளைப் பேணும் மிக நெருங்கிய நட்பு நாடாகத் திகழ்ந்து வருவதுடன் பிரதான கொடையாளராகவும் இருந்து வருகின்றது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவும் தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது. மேலும் 2014 டிசம்பரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் கியூபன் அதிபரும் காஸ்ட்ரோவின் இளம் சகோதரருமான ரௌல் காஸ்ட்ரோவும் தமக்கிடையேயான ராஜ தந்திர உறவைப் புதுப்பித்திருந்ததுடன் தூதரக உறவையும் மீளக் கட்டி எழுப்பியிருந்தனர். இவ்விவகாரத்தில் நடுநிலை பேணிய ஃபிடெல் உடல் நலக் குறைவு காரணமாக 2006 ஆம் ஆண்டிலும் 2008 இல் உத்தியோகபூர்வமாகவும் பதவி விலகியிருந்தார். தற்போது இவரது சகோதரர் ரௌல் காஸ்ட்ரோ பதவியில் உள்ள போதும் அவர் ஃபிடெல் இன் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே இயங்குவதாகவும் கியூபாவில் சட்ட அமுலாக்கம் போன்ற விவகாரங்களில் ஃபிடெல் இன்னமும் முக்கிய பங்கு வகிக்கலாம் என பல கியூப மக்கள் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடந்த ஒரு வருடத்துக்குப் பின் முதன் முறையாகப் பொது மக்கள் முன் தோன்றிய ஃபிடெல் காஸ்ட்ரோ