Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரின் ஆடைகளை களைந்து, அவரது கை, கால்களை கட்டி போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம், சுராஜ்பால் காவல்நிலைய போலீசாருக்கு, மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அவரை காவல்நிலைத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரது ஆடைகளை களைந்து சரமாரியாக அடித்ததுடன், கை மற்றும் கால்களை கட்டியுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்கும் அவருக்கு டம்பர் மூலம் வாயில் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலை பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மனநிலை பாதிக்கப்பட்டவரை தாக்கிய போலீசார்! (வீடியோ இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com