Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள கூட்டணிக் குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, கலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அனைத்துக் கட்சிப் பிரமுகர்களுடன் சென்று பிரதமரை சந்திக்கத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாக நடத்தியும் முடித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். முதலில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்து ஆதரவு கோரினார் விஜயகாந்த். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுக்குறித்து கருணாநிதியிடம் கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தேமுதிகவுடன் கூட்டணி இருக்குமா என்கிற கேள்விதான் அது.

இதற்கு பதில் அளித்த கருணாநிதி, தற்போதைய சூழலில் இப்படிப்பட்ட கூட்டணித் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார்.கருணாநிதியின் இந்த கருத்துக் குறித்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது இப்போது என்னால் பதில் கூற முடியாது என்றும், கலைஞர் என்ன சொன்னார் என்று இதுவரை தாம் படிக்கவில்லை என்றும், படித்த பிறகு பதில் சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்கள் மீண்டும் கருணாநிதியின் கருத்துக்களை எடுத்துரைத்த போது, கலைஞர் என்ன அர்த்தத்தில் இப்படி சொன்னார் என்பதுக் குறித்தெல்லாம் நான் படித்தால்தான் தெரியும் என்றும் இப்போது தம்மால் பதில் உரைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டெல்லிக்கு அனைத்துக் கட்சிகளுடன் சென்றபோது பாமக சார்பாக ஒருவரை அழைத்துச் செல்ல பாமகவை எத்தனையோ முறை தொடர்புக்கொள்ள முயற்சித்தும் அவர்கள் தொடர்புக்கு வரவில்லை என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

0 Responses to கலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com