Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு தாங்கள் காரணமல்ல என்று பொது பல சேனா அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தோல்வி கிட்டும் என்று தெரிந்திருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தவறாகும். இவ்வாறிருக்க, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் கண்ட தோல்விக்கு பொது பல சேனா அமைப்பே பொறுப்பு கூற வேண்டும் என்று கூறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தமது இயக்கம் ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டது என்று கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சேனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com