இருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 7ம் திகதி அன்று செம்மரம் கடத்தியவர்கள் என்று ஆந்திர அதிரடிப்படை 20 தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இது தமிழ் நாட்டில் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில் இதுக்குறித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஆந்திர உயர் நீதிமன்றமே, ஆந்திர காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளது. இது அனைத்தையும் பார்த்துக்கொண்டு தமிழக அரசு இன்னமும் மவுனம் சாதித்து வருகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழக அரசும் பங்கெடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to இருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தமிழக அரசு மவுனம்: ஸ்டாலின்