பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் விசேட ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில், 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 65 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஜுலை 31 ஆம் திகதி நிறைவடையும், அதேவேளை, 21 நிறுவனங்களின் பதவிக்காலம் ஒக்டோபர் 16 ஆம் திகதி பூர்த்தியடைகிறது. இரு உள்ளூராட்சி நிறுவனங்களின் காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவடைகின்றன.
இந்த உள்ளூராட்சி சபைகள் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டங்களின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவற்றின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும். இருந்தாலும், எதிர்காலத்தில் தொகுதிவாரி அடிப்படையிலான கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடத்தி உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஏற்றவாறு இவற்றின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிக்காது அவற்றின் காலம் தானாக முடிவடைய அரசாங்கம் இடமளித்துள்ளது.” என்றுள்ளார்.
0 Responses to 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!