Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான சில சிக்கலான விடயங்கள் மீது மீள் கவனம் செலுத்துமாறு சீனாவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சீன விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சீனாவின் குடியரசுத் தலைவர் லீ கெகியாங்கை சந்தித்த பின்னர் அச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில், சில சிக்கல்களுக்கு முடிவு எடுப்பதற்கு இரு தரப்பு ஒத்துழைப்பும் மிக முக்கியமானது.

அவை குறித்தும் நாம் விவாதித்தோம். குறிப்பாக சீனாவுக்கான விசா சலுகைகள், அருணாச்சல் பிரதேச்டத்தில் இருப்பவர்களுக்கான சீனாவின் விசா சலுகைகள் குறித்தும் விவாதித்தேன். எமது சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும், நட்பு ரீதியானதாகவும் இருந்தது. சீன/இந்திய எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் உறுதியான கருத்தை வலியுறுத்தினேன் என்றார்.

முன்னதாக இந்தியா / சீனா நாடுகளுக்கு இடையில், ரயில்வே, நிலக்கரி, விண்வெளி, புவியியல், பொறியியல், சுற்றுலாத் துறை, செங்டு - சென்னை போன்ற சகோதர நகரங்கள் குறித்து 24 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் / சீனாவுக்கு இடையில், பாகிஸ்தான் கட்டுக்குள் இருக்கும் காஷ்மீர் பகுதியின் அபிவிருத்திக்காக சுமார் 46 பில்லியன் டாலர் நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தியா - சீனா இடையே 24 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com