Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜகவின் ஆதரவில்லாமல் ஜெயலலிதா விடுதலை சாத்தியமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்புக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இளங்கோவன், ஜெயலலிதாவின் விடுதலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது என்றும்,பாஜகவின் ஆதரவில்லாமல் ஜெயலலிதா விடுதலை சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு அருண்ஜெட்லி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவை சந்தித்த போதே, ஜெயலலிதாவின் விடுதலை உறுதியாகி உள்ளது என்றும், விரைவில் இதுக்குறித்த ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கர்நாடக அரசு நிச்சயம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதிகளின் தீர்ப்பை விமரிசிக்கக் கூடாது என்றும், விமர்சனம் செய்வதை வழக்கறிஞர்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பார்கவுன்சில் கூறியுள்ளது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாஜகவின் ஆதரவில்லாமல் ஜெயலலிதா விடுதலை சாத்தியமில்லை: இவிகேஎஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com