மோதல் காலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதி முகாம்களில் வாழ்ந்த இலங்கையர்களில் 65 பேர் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் இரண்டு விமானங்களில் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இவர்கள், சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் டி.எம்.சுவாமிநாதன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்: டி.எம்.சுவாமிநாதன்