Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் செய்யப்பட்ட மூன்று வெவ்வோறு முறைப்பாடுகளை அடுத்தே அவர் நேற்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டு நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒப்பந்தகாரர் வி.றஞ்சிதமூர்த்தி, தன்னிடம் 20 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும், காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நூர்தீன் என்பவரின் காணியை 45 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிவிட்டுக் கொடுத்த 45 இலட்சம் ரூபாவுக்கான காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா முகமது சஜீத் என்பவரிடம் காணியினை 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா விலைக் வாங்கிவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸ் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் சார்ஜன் சி.சபேசனால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முதலாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும், இரண்டாவது வழக்குக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும், மூன்றாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மஹிந்தவின் முன்னாள் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து கைதாகி பிணையில் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com