Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, 'நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.

யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன் மூலம் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட எவரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை அபிவிருத்தி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

மதங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க வேண்டும். சந்தேககங்களுக்கு இடமளிக்கக் கூடாது. விசேடமாக, இந்த நாட்டில் இனி யுத்தமொன்று ஒருபோதும் இடம்பெறாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com