Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிதி குற்றம் புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தியே அவர், மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, தன்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன் ஊடாக கோத்தபாய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 44 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டள்ளனர்.

பிரதமரினால் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட 1901/20 வர்த்தமானி மற்றும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றை வலிதற்றதாக்குமாறே அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

0 Responses to கோத்தபாய ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com