பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு பயந்து எதிர்த்தரப்பினர் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப முயல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்றைய (புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர் பதிலளித்தார்.
அதில் “ஏதும் வழக்கில் தடையுத்தரவு வழங்குவதானால் பிரதான தரப்பினருக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும். இது குறித்து அரசியலமைப்பின் 132வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் மனு தொடர்பில் வழங்கப்பட்ட தடை உத்தரவினால் முதற் தடவையாக சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பில் உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் பிரதான தரப்பினராக நாம் இந்தப் பிரச்சினையை முன்வைத்தோம்.
நீதித்துறை அதிகாரம் மக்களினூடாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர்களை பதவி விலக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால் எமது அரசாங்கம் குற்றப் பிரேரணை எதனையும் கொண்டு வர தேவையில்லை.
சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக செயற்பட்டது போன்று நாம் செயற்பட மாட்டோம். டிரான் அலஸ் தொடர்பான வழக்கின் போது இடைக்கால உத்தரவு வழங்குவதானால் சகல தரப்பினருக்கும் அறிவிக்க வேண்டுமென நீதிபதி அறிவித்திருந்தார்.
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஏற்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே நாம் இந்த விவகாரத்தை பொதுநலவாய அமைப்பின் கருத்தறிய தயாராகிறோம். இது தொடர்பான ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷவினால் 2013இல் கைச்சாத்திடப்பட்டது.
இந்த விடயத்தை பொதுநலவாய அமைப்பிற்கு கொண்டு செல்ல உரிமை இருக்கிறது. தேவையான ஆலோசனைகளை பெற்று இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறோம். மோசடிகளை ஒழிக்கவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
உங்களது தலைவர் மைத்திரிபால சிறிசேனவா, மஹிந்த ராஜபக்ஷவா? முதலில் அதனை கூறிவிட்டு சபையில் பேசுங்கள். பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப முயலாதீர்கள். மைத்திரிபால சிறிசேனவை காலால் இழுக்க முயற்சிக்காதீர்கள்.
சபாநாயகரை அச்சுறுத்தி பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பாதீர்கள். சபாநாயகரின் தீர்ப்பை ஏற்காவிட்டால் அது தொடர்பில் பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியும். பாராளுமன்றத்தின் அனுமதியின்றி திறைசேரி முறிகளை விநியோகிக்க முடியாது என சிராணி பண்டாரநாயக்க தீர்ப்பளித்திருந்தார். ஆனால் கடந்த அரசாங்கம் அதனை மாற்றியது.
தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு பயந்து இங்கு குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள். இவற்றை எதிர்ப்பதானால் அது குறித்து சுதந்திரக் கட்சியில் பேசி முடிவெடுங்கள். பாராளுமன்றத்திற்கு நெருக்குதல் வழங்காதீர்கள்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயங்குகின்றது: ரணில்