Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, உண்மையான நீதியை நிராகரிக்கச் செய்யும் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பின்படி உச்ச நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்க சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குழுவில் மூன்று நீதிபதிகள் இடம்பெறுவது முக்கியம் என்றும், கோத்தபாய ராஜபக்ஷவின் கைதை தடை செய்யும் உத்தரவை இரண்டு நீதிபதிகளே பிறப்பித்துள்ளதால், இதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிக்கல்கள் உள்ளதாக தமது சட்டத்தரணிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடையுத்தரவு அரசியலமைப்புக்கு அமைவாக இல்லாவிடில், இதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சம்பந்தமாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள பெளத்த- இந்து மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான நீதிமன்ற தடையுத்தரவு தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

கோத்தபாய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மனுவின் பிரதி தமக்குக் கிடைத்துள்ளதாகவும், அந்த கோவை 600 பக்கங்களை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், அதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக தமது சட்டத்தரணிகளிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட தடையுத்தரவின் பிரதி தமக்குக் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டிய அவர், தமக்குத் தெரிந்த வரையில் நீதிமன்றம் இன்னும் குறித்த தடை யுத்தரவை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கோத்தபாய கைது மீதான தடையுத்தரவு, நீதி நிராகரிக்கப்படலாம்: ரணில் ஆதங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com