Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் பாதுகாப்புத் துறைக்குஅதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டு கால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்தியப் பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதிதாக 40 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாம்.மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் துறையின் பல்வேறுத் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதற்கும் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது என்று, பாதுகாப்புத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முப்படை அதிகாரிகளும் மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்று வருத்தம் தெரிவித்திருந்தது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com