Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகள் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் மறுத்துள்ளார்.

தனது குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானதென அவர் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனக்கோ, தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்களுக்கோ வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய கணக்கோ, நிறுவனங்களில் இரகசிய முதலீடுகளோ இல்லை. மங்கள சமரவீர உறுதியற்று இவ்வாறு கருத்து வெளியிடுவதால் சர்வதேச ஊடகங்களிலும் அது செய்தியாக்கப்பட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to எனக்கோ, குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் இரகசிய கணக்குகள் இல்லை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com