Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கும் நடிகர் சல்மான்கானுக்கும் தொடர்பு காணப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கள ஊடகமொன்று இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நடிகர் சல்மான்கான் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது ராஜகிரிய கலப்புவாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 18 வயதுடைய இளைஞனும், 17 வயதுடைய யுவதியும் காயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த டிவென்டர் ரக வாகனமொன்று பஸ் தரப்பிடத்தில் நின்ற இளைஞனையும், யுவதியையும் மோதியது என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்விபத்திற்கும், நடிகர் சல்மான் கானுக்கும் தொடர்பு காணப்படுவதாக தெரிவித்த போதிலும் அவரை காப்பாற்றும் நோக்கில் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை குறித்த வாகனத்தின் சாரதியே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

காயமடைந்த யுவதி தற்போது வரையில் கால் ஊனமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்த நபர்கள் ஒரே மாதிரியான ஆடையை அணிந்திருந்தனர் என இதற்கிடையில் சம்பவத்தின் போது குறித்த இடத்திற்கு வருகை தந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

எதுஎவ்வாறாகயிருப்பினும் நடிகரை காப்பாற்றும் நோக்கில், சம்பவ தினத்தன்று குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு சல்மான்கான் சென்றதாகவும், குறித்த நேரத்திற்கும், விபத்து நேர்ந்த நேரத்திற்கும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது என பொலிஸார் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரினால் விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அவர் மற்றும் அவரது நண்பர் இந்த டிவென்டர் வாகனத்தில் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற டிவென்டர் வாகத்தின் இலக்கம் போலியானது என பின்னர் தெரியவந்துள்ளது.

அதே இலக்கத்தையுடைய வேறொரு டிவென்டர் ரக வாகனம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கம் கடந்த கால அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் குறித்த இலக்கத்துடன் கூடிய வாகனத்தை தான் வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக குறித்த அமைச்சரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இன்னும் குறித்த விபத்து தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை விபத்திலும் நடிகர் சல்மானுக்கு தொடர்பாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com