தமிழீழ மக்களை பொறுத்தவரையில் அவர்களது சரித்திரங்கள் சம்பவங்கள் யாவும் சந்ததி சந்ததியாக மறைக்கப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.
தமிழீழ மக்களது சரித்திரம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை நான் இங்கு எழுதித்தான் யாரும் அறிய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் சகல சிங்கள ஆட்சியாளர்களும் தமிழீழ மக்களது சரித்திரத்தை திட்டமிட்டு மறைத்து வருவதில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் திறமையான வெற்றியை கண்டுள்ளார்கள்.
போர்த்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை தீவிற்கு வருகை தருவதற்கு முன்னர், தமிழர் தம்மை தாமே தங்களது ராஜ்ஜியத்தில் ஆண்டார்கள் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் மறைத்து, தமிழீழ மக்கள் ஓர் வந்தேறு குடிகள் என்பதை வெற்றிகரமாக சர்வதேசத்திற்கு பறைசாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
போர்த்துகீசர், ஒல்லாந்தர் தமிழர் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், இவற்றை சிங்கள ராஜதானிகளுடன் இணைக்காது, தமிழர் ஓர் தனி ஆட்சியின் கீழே நிர்வாகிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் இன்று தமிழர்கள் விடயத்தில் “முதளைக் கண்ணீர் வடிக்கும்” பிரித்தானியரோ, இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்த மாபெரும் துரோகத்தினால்;, தமிழீழ மக்களாகிய நாம் இன்று நாடு இன்றி, அநாதைகளாகவும், அகதிகளாகவும், உலகில் வலம் வருகிறோம்.
பிரித்தானியர் இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் ஆட்சியை சுலபமான நிர்வாகித்திற்காக மற்றைய சிங்கள ராஜதானிகளுடன் இணைத்தது மட்டுமல்லாது, இலங்கைத் தீவிற்கு 1948ம் சுதந்திரம் கொடுக்கும் பொழுது, எண்ணிக்கையில் பெரும்பான்மையான பௌத்த சிங்களவாதிகளிடம் தமிழ் மக்களை ஒழுங்கான அரசியல் அந்தஸ்து அற்றவர்களாக கைவிட்டுவிட்டு சென்றார்கள் என்பது மறைக்க முடியாத சரித்திரம்.
பிரித்தானியாவின் நாடகம்
இன்று நடப்பது என்ன? பிரித்தானியாவில் தேர்தல் காலங்களில், பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகளான – பழமைவாத கட்சியான கன்சவேட்டியும் தொழில் கட்சியும், பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்களது வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக, அவர்களது தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்.
ஒரு கட்சி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளில் அக்கறை கொண்டவர்கள் போல் ஓர் நடிப்பு, மற்றைய கட்சி இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற மனித உரிமை, மனித நேய, மனிதாபிமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென கொக்கரிப்பது வழமையாகிவிட்டது. இறுதியில் எல்லாமே, வெற்று வார்த்தைகள் தான்.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை கூட்டத் தொடரை நாம் பிரித்தானியாவின் நடிப்பிற்கு நல்ல உதாரணமாக கொள்ளலாம். இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தற்போதைய அரசு, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட போர் குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களிற்கு ஓர் உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளக் கூடிய அத்திவாரக்கல்லை பிரித்தானிய பிரதிநிதியே நாட்டிக் கொடுத்தார்.
பிரித்தானியப் பிரதிநிதியின் இதுபற்றிய வார்த்தைகளை மனித உரிமை சபையில் இருந்து கேட்ட பொழுதும், இவ் அறிக்கையை மீண்டும் மீண்டும் வாசிக்கும் பொழுதும், எமது மனம் எரிமலையாகிறது.
இன்று சிங்கள தேசம் தமிழீழ மக்களை நாட்டிலும், புலத்திலும் பல பிரிவுகளாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் கல்விமான்கள் புத்திஜீவிகள் வரையுள்ள தமிழ் ஏமாளிகள், நாளுக்கு நாள், புதிய கட்சியும், புதிய குழுவுமாக உலகின் முலை முடுக்கெல்லாம் வலம் வருகிறார்கள்.
இறுதியில் கண்ட மிச்சம் யாவும், பூச்சியம் (சைவர்).
இத் தவறுகளை என்று தான் ஈழத் தமிழர்கள் உணர்கிறார்களோ, அன்று தான் தமிழீழ மக்களுக்கு விமோசனம். ஐக்கியம், நேர்மை, கொள்கை, கடமை உணர்வு என்பது எள்ளளவும் இல்லாதவர்களே தமிழீழ மக்களென உலகம் உதாரணம் காட்டுமளவிற்கு நாங்கள் ‘விளக்கு எண்ணெய்’ ஆகிவருகிறோம்.
ஜனநாயக துஸ்பிரயோகம்
இலங்கைத் தீவில் ஜனநாயகக் காற்றை சுவாசிக்காத நாம், மேற்கு நாடுகளில் உள்ள ஜனநாயகம், சுதந்திரத்தை கண்டு வியப்படைந்து, அவற்றை மிகவும் மோசமான முறையில் துஸ்பிரயோகமும் செய்கிறோம். இவை பட்டியலிடுவதனால், இக் கட்டுரையின் நோக்கம் வேறு திசைக்கு சென்றுவிடும்.
நிற்க, தமிழீழ மக்களின் சரித்திரங்களையும் சம்பவங்களையும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மட்டும் மறைத்து வருகிறார்கள் என்பது உண்மை அல்ல. தமிழீழ மக்களது புலம் பெயர் வாழ்க்கை என்பது, சோகம், சர்ச்சை, எரிச்சல், போட்டி, பொறாமை போன்றவற்றிற்கு உள்ளடக்கப்பட்டவையே.
நாட்டில் தமது வட்டங்களிற்குள் மட்டுமே வாழ்ந்து வந்த பெரும்பான்மையான மக்கள், புலம்பெயர் வாழ்வில் தமது சரித்திரங்களை மறைத்துவிட்டு, தம்மை இனத்தின் தலைவர்களாகவும், ஊடகத்துறையில் நிபுணர்களாகவும், சிலர் இவற்றிற்கு ஒருபடி மேல் சென்று, தம்மை ஓர் நீண்டகால தமிழீழ விடுதலை போராட்டத்தின் பங்களியாகவும் கண்பிக்கிறார்கள்.
இவற்றிற்கு சில உதாரணங்களை, நாம் வாழும் பிரான்ஸ் நாட்டில், சில தமிழர் செயற்பாடுகளின் போலித்தனங்கள் மூலம் காணலாம்.
அன்று, 1990க்களில், புலம் பெயர் வாழ் மக்களிடமிருந்து சேர்க்கப்படும் நிதி போதாத காரணத்தினால், போராட்டத்திற்கான நிதியின் தேவை, மேலதிகமாக தேவைப்பட்ட வேளைகளில், இதற்கான மாற்று வழிகளை கையாளுமாறு பொறுப்பாளர்கள் வேண்டப்பட்டார்கள்.
ஈழமுரசு
அவ்வேளையிலேயே, பிரான்ஸில், சகல செய்திகளை உள்ளடக்கி ‘ஈழமுரசு’ என்ற ஓர் பத்திரிகையை வெளியிடுவதற்காக 1995ம் ஆண்டு சிலர் முன்வந்த வேளையில்,
பாரிஸில் 1996ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கஜன், ஆசிரியராக நியமிக்கப்பட்டு, ‘ஈழமுரசு’ வெளிவருவதற்கான வேலை திட்டங்கள் அமளியாக நடைபெற்ற வேளையில்,
ஈழமுரசு பத்திரிகை வெளிவருவதை விரும்பாத, ஏற்கனவே பாரிஸில் முழு லாபநோக்கத்துடன் வெளிவரும் ஒரு பத்திரிகையின் நிர்வாகி, ‘ஈழமுரசு’ பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்ட கஜனிடம்,
“பணம் சம்பதிப்பதற்காக பத்திரிகை நடத்த விரும்புவதனால், இதை விட சில விபச்சாரிகளை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினால், பத்திரிகை நடத்துவதற்கு மேலாக நல்ல லாபம் வருமென” எந்த நாகரீகம் பண்பு இல்லாது கூறியது இன்றும் எமது பலரின் காதுகளிற்குள் ஒலித்த வண்ணம் உள்ளது.
இப்படியான மிக கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள் இத்துடன் நிற்கவில்லை, அவ்வேளையில், மக்கள் கடை என்ற பெயரில் ஓர் பலசரக்கு கடையை நடத்தினால், இதன் மூலம் லாபம் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி, பாரிஸில் மக்கள் கடையை 1996ம் ஆண்டு ஆரம்பித்த வேளையில்,
ஈழமுரசு பத்திரிகை வெளிவருவது பற்றி எரிச்சலும், ஆத்திரமும் கொண்ட அதே நபர், கூறியதாவது, பலசரக்கு கடை நடத்தி லாபம் பெறுவதற்கு மேலாக, பொறுப்பாளர்கள் தமது மனைவிமாரை விபச்சாரத்திற்கு அனுப்பி இதற்கு மேலான லாபத்தை பெற்றுக் கொள்ளலாமென” எந்த கூச்சம், பண்புமுமின்றி கூறினார்.
முன்னாள் போராளிகள்
அது மட்டுமல்ல, 2009 மே மாதத்திற்கு பின்னர், அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர் தேசத்திற்கு வந்த முன்னாள் போராளிகளைப் பார்த்து, “நீங்கள் அங்கு சைனைட்டை அருந்தி தற்கொலை செய்யாது ஏன் இங்கு வந்தீர்களென” கேட்பவர்களும் இவர்களே.
இத் துணிகரமான வார்த்தைப் பிரயோகம் நிச்சயம் பலம்படைத்த யாருடையோ பின் புலத்துடனேயே நடைபெற முடியும். இவர்கள் தமது இறந்த காலத்தையும், அகதி வாழ்வையும் மறந்து விட்டார்கள் போலும்.
பிரான்ஸ் அரசாங்கம் முன்னாள் போராளிகளை வரவேற்று இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், தங்குமிட வசதிகள் கொடுப்பது மட்டுமல்லாது, இவர்களில் பலரை ஜெனிவா சட்டத்திற்கு அமைய அரசியல் தஞ்சம் கொடுத்துள்ள வேளையில், பிரான்ஸின் இனவாத காட்சி ‘தேசிய முன்னணி’ கூட இவ் வார்த்தைப் பிரயோகம் செய்யாமல் இருக்கும் வேளையில், இவர்(கள்) யார் இவ் வாக்கியத்தை கூறுவதற்கு? இவர்(கள்) தான் இன்று இங்கு வந்த போராளிகளிடம் உழைப்பு நடத்துபவர்களும்.
இதில் ஓர் முக்கிய விடயம் என்னவெனில், இவர்களிடம் மொழி பெயர்பிற்கு கொடுக்கப்பட்ட பல ஆவணங்கள், சிறிலங்காவின் புலனாய்வின் கைகளுக்கு எப்படியாக சென்றது என்பதற்கு இன்றும் விடை தெரியாத வினாவாக தொடர்கிறது.
அடுத்து வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து, நாட்டின் சத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு மாமியார் வீடு சென்று வந்தவர்(கள்), மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியவர்(கள்), திடீரென 2007ம் ஆண்டு யூலை மாதத்தின் பின்னர் தங்களை ஓர் அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்ளும் பேர் ஆசை குடிகொண்டது ஏன்? இவர்(கள்) தமக்கு தாமே ஐந்து கண்டங்களின் இணைப்பாளரென பட்டம் சூட்டி பெருமிதம் அடைகிறார்கள்.
இன்று இவர்கள் தான் பிரான்ஸ் தமிழ் மக்களின் முன்னனி தலைவர்களா? சரித்திரங்கள் சம்பவங்களை மூடி மறைத்துவிட்டு, விடயங்கள் புரியாதோர் முன்னிலையில் பெரும் தலைவர்கள் போல் நடிக்கிறார்கள்.
இவர்களின், அரசியல் வேலை, பரப்புரை வேலைகள் எப்படியாக தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக அமைய முடியும்? எமக்கு நன்கு அரசியல் தெரியும், புரியும் என்பதை, தினமும் எமது செயற்பாடுகள் மூலம் இவர்களுக்கு நிரூபித்து வருகிறோம்.
கேள்வி என்னவெனில், பிரெஞ்சு மொழியோ ஆங்கில மொழியோ ஒழுங்காக எழுத வாசிக்க முடியாதவர்கள், புலம்பெயர் தேசங்களில் எப்படியாக அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியும்? இதற்கு பல உதாரணங்களை இங்கு காண்பிக்கலாம்.
பிரான்ஸ் நாட்டில்
பிரான்ஸ் நாட்டில் குறைந்தது பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் எந்த அரசியல் கட்சியோ, அரசியல் பிரமுகர்களோ முன்வந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக அன்று குரல் கொடுத்தார்களோ, அதே பிரமுகர்கள் தான் இன்றும் முன்னிற்கிறார்களே தவிர, வேறு யாரும் இங்கு புதிதாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தது கிடையாது.
இதே போல் பிரான்ஸில் உள்ள பிரெஞ்சு அமைப்புக்களுடனான தொடர்புகளும். இதை சரித்திரம் தெரியாது நேற்று பிரான்ஸில் செயற்பட முன்வந்தவர்கள் ஓர் பெரிய வேலை திட்டமாகவும் வெற்றியாகவும் கொள்கிறார்கள்.
மிக அண்மையில் பாரிஸில் அரசியல் கைதிகள் பற்றிய ஓர் கூட்டம் நடைபெற்றது. முள்ளிவாய்காலின் பின்னர் சிறிலங்காவின் அரசியல் கைதிகளாகி மிகமோசமான அட்டூழியங்களை அனுபவித்து, தமது குடும்பங்கள் பிள்ளைகளை பிரிந்து, பிரான்ஸ் வந்துள்ள முன்னாள் போராளிகள் சிலர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.
அங்கு கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக ஓர் தமிழர் உரையாற்ற வருவதாக அறிவிக்கப்பட்டது. இவ்வேளையில் அந் நபர் அங்கு காட்சியாளித்தார்.
அவர் அந் நாட்டிலிருந்து வருகை தந்த அரசியல் கைதிகளாகிய முன்னாள் போராளிகளை கண்டதும், தான் அங்கு உரையாற்ற மாட்டேன் என்றும், நாட்டில் இயக்கத்தை அழித்த சிலர் மண்டபத்தில் உள்ளதாக அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு மாயமாக மறிவிட்டார்.
இவருடைய கபட நாடகத்தை அறியாத தமிழ் அரசியல் கைதிகள் திகைத்துவிட்டனர்.
உண்மை என்னவெனில், இந் நபர் அங்கு உரையாற்றுவதனால், ஒன்றில் அவரது அரைகுறை பிரெஞ்சு மொழி அல்லது, அரைகுறை ஆங்கில மொழியில் தான் உரையாற்றியிருக்க வேண்டும்.
அங்கு சென்ற தமிழ் அரசியல் கைதிகளோ, மிக திறமையாக பிரெஞ்சு ஆங்கிலம் பேசக் கூடியவர்களுடன் தான் சென்றுள்ளார்கள். இதை அவதானித்த ஐந்து கண்டங்களின் இணைப்பாளர், தான் அங்கு உரையாற்றினால் தமது மொழித் திறமையின் வண்டவாளங்களை மற்றவர்கள் புரிந்துவிடுவார்கள் என்ற காரணத்தினால், ஒரு சாட்டு போக்கை கூறிவிட்டு ஓட்டம் பிடித்தார். வெட்கம், பிரான்ஸில் அரசியல் வேலைகளை இவர்(கள்) தான் நிமிர்த்தப் போகிறார்களா?
சுயநிர்ணய உரிமை
இதே போன்று தான், இன்று நாட்டில், சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களும். 2002ம் ஆண்டில் முதல் முதலாக தேர்தலில் பங்குபற்ற முன்வந்தபொழுது, அவ்வேளையில் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்,
இயக்கத்துடன் எந்த தொடர்புகளையும் பேணாதவர்களும், இன்று தமது போலித் தனத்தால், புலம்பெயர் தேசங்களில் உணர்ச்சிவச அரசியல் பேசுவோருக்கு, தம்மை அரசியல் ஆசான்களாக காண்பித்து, ‘தமிழீழம்’ பெற்றுக் கொடுக்க போகிறார்கள். இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் செய்த உருப்படியான செயல் திட்டம் என்பது, மற்றைய பாராளுமன்ற உறுப்பினர் பற்றி ‘கோள்’ கூறுவதே.
பலர் பற்றிய உண்மை கதைகளை எம்மால் எழுதப்படுமானால், மீண்டும் பாரளுமன்ற உறுப்பினராக விரும்பி, பகற்கனவு காணுவோருடைய முயற்சிகள் தவிடு பொடியாக்கப்படும் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும்.
சுருக்கமாக கூறுவதனால், பலவிதப்பட்ட சம்பவங்களும், சரித்திரங்களையும் மூடி மறைத்தவர்கள் தான், இன்று புலம் பெயர் தேசங்களில் உணர்ச்சிவச அரசியல் பேசும் மக்கள் முன்னிலையில் போலியாக கௌரவமான மனிதர்கள் போல் வலம் வருகிறார்கள்.
இப்படியான கபட நபர்களின் நடமாட்டம் ஓர் சிறிய வட்டத்திற்குள் தான் இருக்க முடியும். பேய்க்காட்டு அரசியல் நீடிக்காது என்ற உண்மை, அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும்.
ச. வி.கிருபாகரன்,
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com

0 Responses to மறைக்கப்படும் சம்பவங்களும் சரித்திரங்களும் - ச.வி.கிருபாகரன்