ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்வதாகவும், அதற்கு எதிராக எதிராக ஜெனீவாவிலுள்ள பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொலிஸ் அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு தெரிவிப்பது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.
நாங்கள் பாராளுமன்ற ஒன்றியத்துக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு சென்று முறைப்பாடு செய்வோம். மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இருக்கின்றது என்பதை இந்த பொலிஸ் அரசாங்கம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசுக்கு எதிராக ஐ.ம.சு.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவில் முறையிட தீர்மானம்!