Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் என்றைக்குமே ஒத்துழைக்காது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் திட்டவட்டமாக தான் கூறியுள்ளதாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இதன்போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

0 Responses to போர்க்குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை ஜூன் மாதம் ஆரம்பம்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com