Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவதோ, அதில் வெற்றி பெற்று பிரதமராவதோ தனக்கு பிரச்சினையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேண்டும் என்ற எங்களது நோக்கத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அதனை உத்தியோபூர்வமாக அறிவிக்காவிடினும், தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நாரஹேன்பிட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போது வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த பிரதமராவதில் மைத்திரிக்கு பிரச்சினையில்லை: வாசுதேவ நாணயக்கார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com