Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

8 நாட்களுக்குப் பின்னர் நேபாள இடிபாடுகளிலிருந்து 101 வயது முதியவர் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இடிபாடுகளை அகற்றி சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காத்மாண்டுவில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 101 வயது முதியவர் ஒருவரை உயிருடன் மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மீட்புக் குழுவினர்.

இதே போன்று நேபாள நாட்டின் வேறு மாவட்டத்தில் ஒரே வீட்டின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 3 பெண்களை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தப் பெண்களை உயிருடன் மீட்ட சிந்து மாவட்டத்தில் 95 சதவிகித கட்டிடங்கள் தரை மட்டமாகி இருந்தன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் மீட்புப் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் கொண்டுவருவதில் காத்மாண்டு விமான நிலையத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. காத்மாண்டு விமான நிலையத்தில் வெடிப்புக்கள் அதிகம் உள்ளத்தால் அங்கு சிறிய ரக விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பெரிய ரக விமானங்களை அனுமதித்தால் மிக விரைவிலேயே விமான நிலையத்தை மூட வேண்டியிருக்கும் என்பதால், சிறிய ரக விமானங்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்வதில் தாமதம் மற்றும் பற்றாக்குறை ஏற்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து நவீன ரக ஹெலிகாப்டர்கள் வந்திறங்கி உள்ளன. இவை மூலை முடுக்குகளிலும் சென்று மீட்புப் பணிகளை செய்யும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to எட்டு நாட்களுக்குப் பின்னர் நேபாள இடிபாடுகளிலிருந்து முதியவர் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com