யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா கடந்த 13ம் திகதி காமுகர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 9 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அவர்களில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம், யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என பொலிஸாரினால் கூறப்பட்டிருந்தது. ஆனால் 12 மணி வரையும் குறித்த சந்தேகநபர் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவில்லை.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஆத்திரமடைந்த இளைஞர் கும்பல், யாழ்.நீதிமன்றின் சுற்றாடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனை பொலிஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.
எனினும் நண்பகல் 12.30 மணியளவில் குறித்த கும்பல் பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு, நீதிமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்ததோடு, நீதிமன்றத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், நீதிமன்றத்திற்கு வெளியில் நின்றிருந்த வாகனங்கள், மற்றும் பூங்கன்றுகளை கூட விடாமல் அடித்து நொருக்கியது.
இதனையடுத்து நீதிமன்றத்திற்குள் நின்றிருந்த ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள், கர்ப்பவதிகள் அச்சத்திற்குள்ளான நிலையில் நீதிமன்ற கட்டிடங்களுக்குள்ளும், மலசலகூடங்களுக்குள்ளும் ஒழிந்துகொண்டனர்.
இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து பொலிஸார் ஒருவாறாக இளைஞர் கும்பலை வெளியேற்றினர். இதற்குள் கடுமையான கல்வீச்சு தாக்குதலினால் பொலிஸார் மூவர் உட்பட மற்றும் பலர் படுகாயமடைந்திருந்தனர்.
அத்துடன், யாழ்.நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சிலர் காயமடைந்தனர்.
இதன் பின்னர் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை அழைத்து பாதுகாப்பு ஒழுங்கீனம் உள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரியை கடுமையாக திட்டித்தீர்த்த நிலையில், நீதிமன்றம் ஊடாக வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தினர். இதன்போதும் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாரால் முடியாத நிலை உருவானது.
இதன்பின்னர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கல்வீச்சு நடத்திக் கொண்டிருந்த இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியதுடன், சிறைச்சாலை மற்றும், பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் இதன்போது வன்முறையில் ஈடுபட்டிருந்த 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், 37 துவிச்சக்கர வண்டிகள், 26 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 2 முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் நீதிமன்ற தடுப்பில் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாழ்.நகரப் பகுதியிலிருந்த பொலிஸ் காவல் நிலையத்தை அடித்து நொருக்கியதுடன், நகர்ப்பகுதிக்குள் ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் பின்னர் நகர்ப்பகுதிக்குள்ளும் நுழைந்த பொலிஸார் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், குறித்த சம்பவத்தில் இரு சிறிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டி ருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த வன்முறைச் சம்பவம் இன்றைய தினம் மாலை 5மணியளவில் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
எனினும் யாழ்.நகர்ப்பகுதி மற்றும் பிரதான வீதி ஆகியவற்றில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to யாழ்.நீதிமன்ற சுற்றாடலில் நடந்தது என்ன?