Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது ஊரின் புதல்வியும் புங்குடுதீவு உயர்தர மாணவியுமான செல்வி வித்தியா சிவலோகநாதனின் படுகொலையைக் கண்டித்து புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் செ.செல்வகுமாரன் செயலாளர் துரை கணேசலிங்கம் ஆகியோர் கூட்டாகக் கண்டன அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மண்ணில் உதித்து பெற்றவர்களின் எண்ணங்களுடன் தன் சக மாணவிகளுடன் வாழும்காலத்தில் தனது எதிர்காலக் கனவுகளை யதர்சனமாக்க முடியாது ஈவிரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்து, அவரைப் படுகொலை செய்த நிகழ்வினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேற்படி வன்கொடுமை புரிந்த கொலைகாரக் காடையர்க்கு அதிபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். கற்புக்கரசி கண்ணகிக்கு காவல் தெய்வமாக விளங்கியது புங்குடுதீவு மண்.

இனத்தின் விடுதலைக்காய் ஒருமாபெரும் வழிகாட்டியான பெண்ணைப் பெற்று அளித்தது புங்குடுதீவு மண். மொழி பண்பாடு வீரம் சைவம் ஆகியவற்றிற்கு அணிகலனாய் விளங்கும் புங்குடுதீவு மண்ணில் களங்கம் ஏற்பட எம் இனத்தின் பண்பாட்டினை அழிக்கும் பாதகர்களை எல்லாம் பரவவிட்டது எவ்வாறு?

கொலை செய்தவர்கள், கொலைசெய்யத் தூண்டியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதுடன், நீதியின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த புங்குடுதீவு மண்ணின் மைந்தன் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களையும் பாராட்டுகின்றோம்.

துன்பமுற்ற செல்வி வித்தியா சிவலோகநாதனின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றோம்.

காலத்தில் வாழ்வு வாழவென்பதல்ல

வாழ்வினை வாழ்ந்து காட்ட காலம் வழிசமைக்க பஞ்சமா பாதகங்கள் மறைந்திட பொன்கொடு தீவுமண் உயர்ந்திடத் திடன்கொள்வோம்.

புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி.

0 Responses to அரக்கத்தனமான வெறியாட்டத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com