Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கையர்களில் 35 வீதமானோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஆனாலும், அதிகமானோர் நாடு திரும்ப விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, “ஒரு இலட்சம் இலங்கையர்கள் தமிழக அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள். அவர்களில் பலர் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளதுடன், அவர்களில் பலருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பவில்லை.

கடந்த புதன்கிழமை கொழும்பு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்களிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள், நாடு திரும்பியவர்களுக்கு இது ஒரு அடிப்படை பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

இதனால், நாங்கள் விசாரணை காலத்தை குறைக்ககொள்ள முயற்சிக்கின்றோம். தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் மூன்று முகவர் அமைப்புகள் ஊடாக தொடர்ந்து நாடு திரும்பி வருகின்றனர்.

இந்த விடயம் சம்பந்தமாக எமது அமைச்சு, இராணுவம், குடிவரவு திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் நெருக்கமாக பணியாற்றி வருவதுடன், இந்த வேலைத்திட்டம் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு திரும்பும் அனைத்து அகதிகளையும் வரவேற்க அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளது. வியாழக்கிழமை நாடு திரும்பியவர்கள் இந்திய கடவுச்சீட்டுகளை கொண்டிருந்தனர். இரட்டை குடியுரிமை முறையில் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர், அத்துடன் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள்.

எதிர்வரும் நாட்களில் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளவர்கள் அதனை முன்கூட்டியே அறிவித்ததால், அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழக அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்பவில்லை: டி.எம்.சுவாமிநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com