திருகோணமலை சம்பூரில் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதிலும், நீதிமன்றத்திற்கு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையினால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்த காணியை விடுவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு, உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனினும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் பழம்பெரும் உரிமை நிலை நிறுத்தப்படுமென்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
“அனல் மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தவிர்ந்த காணிகள் அனைத்தும் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படுமென்று முன்னைய அரசாங்கம் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளது. அது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்த அவர், குறித்த காணி கபடத்தனமாகத் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதென்றும், அதனை மீள மக்களுக்கு உரித்தாக்குவதற்கான நடவடிக்கையில் பின்னிற்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
சம்பூரில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவிட்டார். எனவே, இடைக்காலத் தடை குறித்து அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சம்பூரில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக காணியை விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டார். முதலீட்டுச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும், பொதுமக்கள் தமது காணிகளைப் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த தனியார் நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

0 Responses to சம்பூர் காணி விடுவிப்புக்கு நீதிமன்றம் தடை; நியாயத்தைக் கோரி போராடுவோம் என சம்பந்தன் அறிவிப்பு!