Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலி.வடக்கினில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை ஊடறுத்து புதிதாக படையினர் அமைக்க முயற்சித்த வீதி வேலைகள் இன்று பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

படையினரால் மீள்குடியமர்விற்கென விடுவிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு பகுதியினில் மக்கள் குடியிருப்புக்களினை ஊடறுத்து பலாலி வீதியினையும் வல்லை-அராலி வீதியையும் இணைக்கும் புதிய பாதையொன்றினை அமைக்கும் நடவடிக்கையினை தற்போது ஆரம்பித்திருந்தனர்.

எனினும் இதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து இம்முயற்சி இன்று தடைப்பட்டு போயுள்ளது.நூற்றுக்கணக்கான படையினர் கனரக வாகனங்கள் சகிதம் இவ்வேலையினில் காலை முதல் குதித்திருந்தனர்.எனினும் தமது காணிகள் ஊடாக அவ்வாறு வீதிகள் அமைக்கப்படுவதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதனையடுத்து இம்முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளது.

வசாவிளான் கிழக்கினை பலாலியுடன் இணைக்கும் வீதியின் ஒருபகுதியை படைதரப்பு தடுத்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பலகிலோமீற்றர் தூரம் பயணித்தே வசாவிளான் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளை சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வலிவடக்கினில் படையினரிற்கு புதியவீதி! தடுத்து நிறுத்தினர் மக்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com