குடியரசுத் தலைவருக்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள புகார் மனு மீது நாளை விசாரணை இருக்கும் என்று தெரிய வருகிறது.
கெஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுனர் மீது புகார் மனு ஒன்றை பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்துள்ளார்.அந்த புகார் மனுவில், தம்மை கலந்து ஆலோசிக்காமல் துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங், டெல்லி சட்டப்பேரவை செயலரை நியமித்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், அவர் நியமித்துள்ள சகுந்தலா தனியார் மின்சார நிறுவனங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டவர் என்று குறைக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் அவர் செயல்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவின் மீதான விசாரணை நாளை இருக்கும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to குடியரசுத் தலைவருக்கு அர்விந்த் கெஜ்ரிவால் கொடுத்த மனுவின் மீது நாளை விசாரணை