Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனு ஜூன் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று, உச்ச நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை கடந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. இவர்களின் விடுதலையை மாநில அரசு தீர்மானிக்கலாம் என்று, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணையில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களிடமும் ஆலோசனை கேட்டு இருந்தது. இதற்கிடையில் மத்திய அரசு மேற்கண்ட 7 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்து இருந்தது. அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற ஜூன் மாதம் 15ம் திகதி நீதிபதி மதன் லோகோ உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு தொடங்கும் என்று தெரிய வருகிறது.

0 Responses to முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான மனு: ஜூன் மாதம் விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com