மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி வருகிறார். இப்போது கடைசியாக அவர் கூறியிருக்கும் காரணம் அமெரிக்கா கொடுத்த 3500 மடிக்கணினிகள் தான்.
இலங்கை இளைஞர்களுக்கு அமெரிக்கா 3500 மடிக்கணினிகளைக் கொடுத்து அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
இதற்கு முன்னர் அவர் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோவைக் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் சிஐஏ, பிரித்தானியாவின் எம்16 புலனாய்வு அமைப்புகளையும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதைவிட, தன்னைச் சுற்றியிருந்தவர்களை எல்லாம் குற்றஞ்சாட்டினார். இப்போது அவரது குற்றச்சாட்டு மடிக்கணினிகளின் மீது விழுந்திருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இலங்கை மீது அமெரிக்காவின் கவனமும் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
சீனாவுடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அளவுக்கதிகமாக நெருங்கி உறவாடத் தொடங்கியதும் அமெரி்க்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட இடைவெளியின் நேரடி விளைவே அது.
இதனால் மனித உரிமை விவகாரங்களைக் காரணம் காட்டி போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்தது அமெரிக்கா.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்த அதேவேளையில், உள்நாட்டிலும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதிலும் சிவில் சமூகத்தையும் எதிர்க்கட்சிகளையும் பலப்படுத்துவதிலும் அமெரிக்கா கணிசமான பங்காற்றியது.
சர்வதேச அரங்கில் இலங்கை மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தங்கள் வெளிப்படையானதாக இருந்தன.
ஆனால் உள்நாட்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் மறைமுகமானதாக இருந்தன. அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சியாக வெளித்தெரியாத வகையில் அமைந்திருந்தது.
அமெரிக்காவின் நோக்கத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்திலேயே புரிந்து கொணடிருந்தது.
பற்றீசியா புரெனிசுக்குப் பின்னர், 2012ம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற மிச்சேல் ஜே சிசன் அம்மையார் இலங்கை அரசாங்கத்தினால் கடுமையாக வெறுக்கப்படும் ஒருவராக மாறியிருந்தார்.
அதற்கு அடிப்படையான காரணமே அவர் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுடன் சிவில் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தி வந்தார்.
சிவில் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட கருத்தியல் மாற்றம், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணியாக இருந்தது.
சிவில் சமூகத்தின் மத்தியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வெறுப்பே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவும், அவருக்கு ஆதரவளிக்கவும் பிரதான காரணம் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு வெளிப்படையானதாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நிச்சயம் கணிசமானது என்பதை ஏற்றேயாக வேண்டும்.
தேர்தலுக்கு அண்மைய காலப்பகுதியில் ஐதேக வின் ஊடாக இளைஞர்களுக்கு அதிகளவில் கணினிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அது குறித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டிருந்தது என்பதுடன், அது அரபுலகப் புரட்சி போன்ற ஒன்றை இலங்கையிலும் ஏற்படுத்தும் முயற்சி என்றும் குற்றஞ்சாட்டியது.
ஆனாலும் அரபுலகப் புரட்சி போன்று இலங்கையில் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியாக நம்பியது. அதை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தது.
ஆனால் ஜனவரி 8ம் திகதி நடந்தது அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட விடயமாகும்.
அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கட்டுப்பாட்டில் இருந்த இணையத்தளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாக குறந்றஞ்சாட்டியிருந்தார் மகிந்த ராஜபக்ச.
மங்கள சமரவீரவின் கட்டுப்பாட்டில் அதிகளவு இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டதும் அவை அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களில் முக்கிய பங்கு வகித்ததும் உண்மையே. அதுபோன்று இணையத்தளங்கள் தமக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
ஆனால் மகிந்த ராஜபக்ச செய்த தவறு, தானும் மங்கள சமரவீரவின் பிரசாரத்துக்கு இணையாக ஊடகங்களைப் பயன்படுத்த தவறியதே.
மகிந்த ராஜபக்ச ஊடகங்களை ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தினாரே தவிர தனக்கான ஊடகங்களை பெருக்க முனையவில்லை. மங்கள சமரவீர உருவாக்கிய பல இணையத்தளங்களை முடக்கியும், தடை செய்தும் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் தனது பெயரை கெடுத்துக் கொண்டார் மகிந்த ராஜபக்ச.
தமிழ் இணையத்தளங்கள் பலவற்றைத் தனக்கு ஆதரவாகத் திருப்புவதில் வெற்றிகண்ட மகிந்த ராஜபக்ச, சிங்கள, ஆங்கில இணையத்தளங்களை அவ்வாறு பெருமளவில் வெற்றி கொள்ள முடியாது போனது.
மகிந்த ராஜபக்ச ஊடகங்களைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்தாமல் போனது அவரது பின்னடைவுக்கு முக்கியமான காரணம் தனக்கெதிரான ஊடகங்களை முடக்கிவிட்டால், ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்கிவிட்டால் அதுவே தனக்கு வெற்றியாகும் என்று அவர் தப்புக்கணக்கு பேகாட்டார்.
ஆனால் இணைய ஊடகங்கள் முடக்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கருத்துக்கள் பரவும் என்ற உண்மையை அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதேவேளை அமெரிக்காவின் இணையத் தொழில்நுட்பம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தனக்கு வசதியாகப் பயன்படுத்தக்கூடிய இணையவெளியை மகிந்த ராஜபக்ச குறுகிய வழியிலேயே பயன்படுத்திக் கொண்டார்.
சீனாவின் நவீன தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொண்டு அதனைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதிலேயே குறியாக இருந்தார் மகிந்த.
அதற்காகவே அப்போதைய அரசாங்கத்தின் வளங்கள் அதிகளவில் செலவிடப்பட்டன. அது மகிந்தவுக்கு எதிர்மறையான பலன்களையே கொடுத்திருந்தது.
மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று தனக்காகப் பயன்படுத்துவதற்கு ஊடகங்களோ, இணையங்களோ இருக்கவில்லை என்பது பொய். அவற்றைத் தன் கைக்குள் வைத்திருந்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை அவருக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
அதைவிட கடைசி நேரத்தில் மகிந்த ராஜபக்ச இணைய ஊடகங்களை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சிலரைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின். ஆனாலும் அவரால் தேர்தாலில் வெற்றிபெற முடியவில்லை.
அமெரிக்கா 3500 மடிக்கணினிகளை வழங்கியது என்ற தகவல் உண்மையானால் அது ஆட்சி மாற்றத்தில் கணிசமான பங்கை ஆற்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை மட்டும் குறியாக வைத்திருந்ததா? என்ற கேள்வியும் உள்ளது.
அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் கொழும்பு வந்திருந்த உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் கொழும்பில் தங்கியிருந்த போது அமெரிக்க தூதரகத்தின் ஐபஸ் எஸ்.எல் என்ற ஒரு சேவையை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அது கிராமங்களுக்கும் இணைய வசதிகளை அறிமுகப்படுத்தும், கொண்டு செல்லும் அமெரிக்காவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நவீன கணினிகள் பொருத்தப்பட்ட இணையைத் தொடர்பு வசதிகளுடன் கூடிய அந்த ஐபஸ் திட்டம், கிராமப் புறங்களுக்கும் கணினியைக் கொண்டு செல்லும் திட்டமாகும். இதற்குப் பின்னால் வேறேதும் திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியாது.
ஆனால் இப்போதைய நிலையில் இலங்கையில் ஆட்சியை மாற்றும் திட்டம் எதுவும் அமெரி்க்காவுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.
எனவே அமெரிக்காவின் தகவல் தொழில்நுடப விருத்தி தனியே ஆட்சி மாற்றங்களுக்கான அடிகோலாக மட்டும் கருத முடியவில்லை.
தனியே இணையத்தளங்களும், ஊடகங்களும் மட்டும் ஆட்சியை மாற்றியதாக தப்புக்கணக்கு போடுகிறார் மகிந்த ராஜப்கச. இணையத்தளங்கள் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு கருவியாக மட்டுமே இருந்தனவே தவிர, அவையே முழுக் காரணிகள் அல்ல. மகிந்த ராஜபக்ச செய்த தவறுகள் தான் அவரைப் பழி தீர்த்திருந்தது.
அதற்காகவே ஏனைய காரணிகள் ஒன்றிணைந்து அவரைக் கீழிறக்கி இருந்தன. இப்போது மகிந்த ராஜபக்சவுக்குத் தான் செய்த தவறுகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெரியவரத் தொடங்கியிருக்கின்றன.
ஆனால் எது பெரிய தவறு என்று அவரால் கண்டறிய முடியவில்லை. அதனால்தான அவர் அவ்வப்போது ஒவ்வொரு காரணங்களை தேடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஹரிகரன்

0 Responses to அமெரிக்க மடிக்கணினிகள் மகிந்தவுக்கு ஆப்பு வைத்தனவா?