Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அபிவிருத்தி என்பது கட்டட நிர்மாணம் மாத்திரமல்ல. ஆனால், கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அபிவிருத்தி என்கிற பெயரில் கட்டங்களை மாத்திரமே நிர்மாணித்து வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இளைஞர்கள் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிவிருத்தி என்பது நிர்மாணம் மாத்திரமே என்ற தோற்றப்பாடு இந்த நாட்டில் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருந்து வருகின்றது. அபிவிருத்தியின் ஒரு பகுதியே நிர்மாணமாகும். அபிவிருத்தியில் முக்கிய இடம் வகிப்பது, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகும். மக்கள் கைகளில் பணம் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்க வேண்டும். அதுவே அபிவிருத்தியாகும்.

கிராமங்களின் அபிவிருத்தி இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டொன்று நிலவுகின்றது. உண்மையில் அவ்வாறொன்றும் இடம்பெறவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், அபிவிருத்தி திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதே வெளிப்படையானதாகும். கடந்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டில் அபிவிருத்தியொன்று இடம்பெறவில்லை. பொருளாதாரத்தை அதிகரிக்கும், சுதந்திரத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to அபிவிருத்தி என்பது கட்டட நிர்மாணம் மாத்திரம் அல்ல: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com