Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல்களின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு. அவர்களை அரசாங்கம் எந்த விதத்திலும் தடுக்காது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தற்போது எங்களுடன் இணைந்தே செயற்படுகின்றனர். வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை வெறுக்கின்றதுடன், மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல், முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த மே மாதம் 19 திகதியை யுத்த வெற்றி தினமென்று அறிவித்துக் கொண்டாடி வந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் வாழும் ஒரு சமூகத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு தினத்தை யுத்தவெற்றியென்று கருதுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை. அதேவேளை, பிரிவினைவாதத்தை தோற்கடித்ததை நினைவுகூரும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது உயிர் நீத்த அனைவருக்காகவும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கடசிகள் அனைத்தும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to மோதல்களில் உயிரிழந்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூரலாம்; தடையில்லை: அரசாங்கம் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com