Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீப மாதங்களாகக் கடும் முற்றுகைப் போரை மேற்கொண்டிருந்த ISIS போராளிகள், மத்திய ஈராக்கின் முக்கிய நகரான ரமாடியின் பெரும் பகுதியை வெள்ளிக்கிழமை மீளக் கைப்பற்றியுள்ளதுடன் அங்கிருக்கும் உள்ளூர் அரச தலைமைக் கட்டடத்தில் தமது கருப்பு நிறக் கொடியைப் பறக்க விட்டுள்ளனர்.

மேலும் ரமாடி நகரின் பள்ளி வாசல்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் தமது வெற்றியைப் பறை சாற்றியும் வருகின்றனர்.

ரமாடி நகரிலுள்ள போலிஸ் தலைமைக் கட்டடங்கள், அங்குள்ள மிகப் பெரிய பள்ளி வாசல் மற்றும் மாகாண அரச கட்டடங்கள் என்பன தற்போது முற்றாக ISIS வசம் வீழ்ந்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வியாழக்கிழமை ஆயுதங்களுடன் புல்டோஷர்களுடனும் தாக்குதலைத் தீவிரப் படுத்திய ISIS குறைந்தது 10 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு நுழைவாயில்களையும் சுவர்களையும் தகர்த்த வண்ணம் உள்ளே புகுந்ததுடன் பின்னர் படிப்படியாக நகர மத்திக்கும் முன்னேறியுள்ளனர். தரை வாயிலாக ஈராக் மற்றும் குர்துப் போராளிகள் தாக்குப் பிடிக்க முடியாது போனதுடன் ISIS இன் இந்த முற்றுகையின் போது அமெரிக்க கூட்டணி நாடுகள் ஈராக் படைகளுக்கு ஆதரவாகக் குறைந்தது 8 வான் தாக்குதல்களை நிகழ்த்தியும் பயன் கிடைக்கவில்லை.

மேலும் ISIS இன் இந்த ஊடுருவலின் போது குறைந்தது 47 ஈராக் பாதுகாப்புப் படைகளும் 26 பொது மக்களும் கொல்லப் பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வாஷிங்டனில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில் ரமாடியில் தற்போது நிலமை இரு தரப்பாலும் 50% வீதப் பகுதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடகிழக்கு நைஜீரியாவின் மார்ட்டே என்ற முக்கிய நகரை போக்கோ ஹராம் போராளிகள் மீளக் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ட்டே நகரம் நைஜீரியா, கமெரூன் மற்றும் சாட் என்ற நாடுகளுக்குச் செல்லும் வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள முக்கிய நகராகும். போக்கோ ஹராமின் போராட்டத்தால் கடந்த 6 வருடங்களில் 15 000 மக்கள் பலியாகியுள்ளதுடன் குறைந்தது 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக்கின் ரமாடி நகர அரச தலைமைக் கட்டடத்தில் கொடியைப் பறக்க விட்டது ISIS

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com