Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் 2014ஆம் ஆண்டு, அதாவது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரங்கள் தொடர்பிலான அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, “கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்கள் வெளியாகின. சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அரசால் கருதப்பட்டவர்கள் தாக்கப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர். பலவந்தமாக காணமற்போகச் செய்தல் காணப்பட்டது.

இதேபோன்று கண்மூடித்தனமாக கைதுசெய்து தடுத்துவைத்தல், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் காணப்பட்டன. படையினரும், பொலிஸாருமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விடுவிப்பு வழங்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் காணப்பட்டதை விட படுகொலைகளும், பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதலும் தற்போது குறைவடைந்துள்ளது. எனினும், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், அதன் உறுப்பினர்கள், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களும், அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அரச ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் சுயசெய்தி தணிக்கையைப் பின்பற்றினர். சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்தன.

தமிழர் வாழும் பகுதிகளில் அரசபடையினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் மேற்கொண்ட படுகொலைகளே இன்னொரு பாரிய மனித உரிமை பிரச்சினையாகக் காணப்பட்டது. பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளிலும் மஹிந்த ராஜபக்ஷ அரசு தலையிட்டது.

கருத்துச்சுதந்தரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் போன்றவையும் தடுக்கப்பட்டன. அரசுடன் தொடர்புபட்ட தனிநபர்களும், அதிகாரிகளும் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரில் சிறிய அளவிலானவர்களைக் கூட மஹிந்த ராஜபக்ஷ அரசு தண்டிக்கவில்லை.

இதேவேளை, உள்நாட்டு மோதலின் இறுதித் தருணங்களில் போர்க் குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களில் ஈடுபட்ட்டதற்காக இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. அரச ஆதரவு ஆயுதக் குழுக்களுடன் தொடர்புள்ள தனிநபர்கள் படுகொலைகள், ஆள்கடத்தல், தாக்குதல்கள், பொதுமக்களை மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆயுதக் குழுக்கள் மற்றும் படையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருந்தது.” என்றுள்ளது.

0 Responses to மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள்: அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com