Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக யோகா தினத்தை முன்னிட்டு இதில் நரேந்திர மோடி கலந்துக் கொள்வதால் டெல்லியில் குடியரசு தினத்துக்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வருகிற 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்துள்ளது. இதில் 192 .நாடுகள் கலந்துக்கொள்கின்றன.டெல்லியில் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்கிறார். இதனால் தீவிரவாதிகள் வான் வழியாகத் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் காலை 7 மணி முதல் 7.35 மணிவரை வானில் காற்றாடிகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு அனுமதி இல்லை.ஊடங்ககளின் கேமிராக்களுக்கும் உயரத்தில் படம்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தினத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளனவோ, அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றி மட்டும் இந்தியா கேட் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.அனுமதி பெற்றவர்கள் அட்டையைக் காண்பித்தால் மட்டுமே .யோகா செய்ய அனுமதி கிடைக்கும். மொத்தம் 5 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள், 50 ஆயிரம் மக்கள் உட்பட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக தொண்டர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இந்நிகழ்ச்சியை புறக்கணிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to உலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தினத்துக்கு இணையான பாதுகாப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com