கர்நாடக அரசு, மேட்டூர் அணைக்கு திறந்து விடும் தண்ணீர் பிச்சைக்கு சமமானது என்று, பாஜகவை சேர்ந்த இல.கணேசன் கூறியுள்ளார்.
திருவாரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இல.கணேசன், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் நஷ்டமடைந்து கடனில் தத்தளிப்பதாகக் கூறினார். மேலும்,கர்நாடகாவில் தற்போது அளவுக்கு அதிகமாக அணைகள் கொள்ளளவையும் மீறி நிரம்பும் அளவு அங்கு மழை பெய்து வருவதாகவும், அவர்கள் தங்களை ஆபத்திலிருந்துக் காத்துக்கொள்ளவே மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்றும் கூறினார்.
அனைத்து உரிமைகளும் நமக்கு எழுத்துப் பூர்வமாக இருந்தும், நமக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து, ஆபத்துக் காலங்களில் தங்களைக் காத்துக்கொள்ள மட்டும் தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடக அரசு என்றும், இது தமிழக அரசு பிச்சை எடுப்பதற்கு சமம் என்றும் அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கணேசன்