முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பெரும் எடுப்பில் விளம்பரப்படுத்திக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் முன்னாள் போராளிகளான தமக்கு தங்கச் சங்கிலி என கூறிக்கொண்டு வழங்கிய சங்கிலி, பித்தளை சங்கிலி என முன்னாள் போராளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருமணத்தின் போது வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கப் படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய போதும் அவ்வாறான உதவிகள் எவையுமே தமக்கு இன்றுவரை வழங்கப்படாத நிலையில் தாம் இன்றளவும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டு ள்ளதாக குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
வடமாகாணசபை மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடமாடும் சேவை நேற்றைய தினம் பாலிநகர் மகாவித்தயாலயத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே குறித்த குற்றச்சாட்டை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மேற்படி முன்னாள் போராளி முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த முன்னாள் போராளி தனது முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
போருக்குப் பின்னர் நாங்கள் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த 53ஜோடிகளில் நானும் எனது மனைவியும் உள்ளடக்கம்.
இந்நிலையில் திருமணத்தின் போது ஒரு பவுண் தங்கச் சங்கிலி என கூறிக் கொண்டு சங்கிலி ஒன்று வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அதனை நாம் பார்த்த போது அது தங்கச் சங்கிலி அல்ல அது ஒரு பித்தளை சங்கிலி என்பது தெரியவந்தது.
மேலும் திருமணத்தின் போது குடியிருப்பதற்கு காணி மற்றும் வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகள் பலவற்றை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியிருந்தார்.
பின்னர் நாங்கள் புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்டு ஊருக்கு திரும்பிய போதும் எந்தவிதமான உதவிகளும் இன்றளவும் வழங்கப்படவில்லை. இதனால் நாம் வாழ்வாதார ரீதியாக மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.
எனவே எமக்கான உதவிகளை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்ளுகின்றோம். என கூறியிருக்கின்றார்.

0 Responses to திருமணத்தில் நாமல் வழங்கிய தங்கச் சங்கிலி பித்தளையாக மாறியது!