Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதான அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிராகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பிரதமருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற சம்பிரதாய வரலாற்றில் இதுபோன்ற அதிகூடிய உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தமை இதுவே முதல் தடவையாகும். இந்த அரசின் தார்மீகமற்ற நடவடிக்கைகள்தான் இவ்வாறானதொரு நிலைமைக்குக் காரணமாகியுள்ளது.

அதை நான் எனது நேரடி அனுபவத்தில் கண்டுள்ளேன். பெருந்தெருக்கள் அமைச்சினூடாக 28 பில்லியன் ரூபா பணத்தை ஹெலிகொப்டரில் பயணம் செய்வதற்கும், தானசாலைகளை நடத்துவதற்கும் நான் செலவு செய்ததாக கடந்த ஒருவார காலத்திற்கு முன்னர் பிரதமர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பெருந்தெருக்கள் அமைச்சு எழுத்தாவணங்களின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் குறுகியகால கடன்தொகை செலவழிந்த விதம் தெளிவாகத் தெரியும். அதில் 6.5 பில்லியன் ரூபா பணம் வீதிச் சுற்றுவட்டங்களை அமைக்கவும் மற்றும் பிரிட்டனின் இரும்புப்பாளம் உள்ளிட்ட வெளிநாட்டு நிதி அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட 22 திட்டங்களுக்கு தேசிய பங்கு செலுத்துவதற்காகும்.

மேலும் 14 பில்லியன் ரூபா வீதி அகலப்படுத்துவதற்காகவும், ஏனைய வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் 4 பில்லியன் ரூபா பாலங்களை நிர்வகித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்வதற்காகவும், இறுதி 3.7 பில்லியன் ரூபா மகநெகும கிராம வீதி அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணம் பற்றி பிரதமர் கூறியிருப்பது முழுப் பொய்யாகும்.

எனது ஆட்சிக்காலத்தில் நிதி கையாள்கை தொடர்பில் முழுமையாக பொய்ப்பிரசாரங்களை முன்னெடுப்பதுடன், திறைசேரி பிணை முறியூடாக நாட்டுக்கு 50 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறும் "கெஸ்டாபோ' குழு பொலிஸ் பிரிவினூடாக எதிர்க்கட்சியினரை சிறை பிடிக்கின்றது.

தற்போதைய அரசால் முன்னெடுக்கப்படுகின்ற பொய்ப்பிரசாரங்கள், பாரிய மோசடி, அரசியல் எதிராளிகளைத் தண்டித்தல் என்பனவே இந்த வரலாற்று முக்கியத்துமிக்க நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் காரணமாகியுள்ளன.” என்றுள்ளது.

0 Responses to அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிரானதே பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com